search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupied homes"

    கொரட்டூர் ஏரியில் மேலும் 230 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படுவதை கண்ட பெண்கள் கதறி அழுதபடி சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் உள்ள கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள 589 ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடமாக பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

    ஆனால் அங்கு வசித்த பொதுமக்கள் யாரும் வீடுகளை காலி செய்ய வில்லை. இதையடுத்து நேற்று முத்தமிழ்நகர், மூகாம்பிகை நகரில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜே.சி.பி. எந்திரம் மீது கற்கள் வீசப்பட்டன. அப்போது 5 பெண்கள் தங்களது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர்.

    பின்னர் அப்பகுதி மக்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்தது. இதையடுத்து வீடுகளில் பொருட்களை அவர்களாவே வெளியே கொண்டு வந்தனர். நேற்று சுமார் 250 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

    இன்று 2-வது நாளாக வீடுகளை அகற்றும் பணி நடந்தது. மேலும் 230 வீடுகள் அகற்றப்படுகின்றன. இதையடுத்து வடக்கு மண்டல போலீஸ் இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த்சின்கா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    வீடுகள் இடிக்கப்படுவதை பெண்கள் கதறி அழுதபடி சோகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


    பின்னர் பொதுமக்கள் தங்களது பொருட்களுடன் கண்ணீர் மல்க வெளியேறினார்கள். அவர்கள் கூறும்போது, “கடந்த 25 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தோம். எங்களது வாழ்வாதாரம் இப்பகுதியில்தான் உள்ளது. குழந்தைகள் அருகில் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் உள்ள வாடகை வீட்டுக்கு குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பண்ருட்டியில் 2-வது நாளாக 100 ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செட்டிப்பட்டறை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் 2-வது பெரிய ஏரியாகும்.

    இந்த ஏரியில் கடந்த 30 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. மேலும் கரும்பு, நெல் போன்ற விவசாய பயிர்கள் பயிரிடும் இடங்களாகவும் மாற்றம் செய்து பயிரிடப்பட்டு இருந்தன.

    இந்த ஆக்கிரமிப்பால் செட்டிப்பட்டறை ஏரிக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுநல அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் 3 பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர்.

    இன்று 100 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டன. மேலும் கரும்பு, நெல் பயிர்களும் அழிக்கப்பட்டன.

    இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×