search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZ mosque"

    நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting
    சிட்னி:

    நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் இருந்த வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    துப்பாக்கி சூடு குற்றவாளி  "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான். 73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன்  தெரிவித்து உள்ளான்.

    நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார். விசாரணைக்கு உதவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். #MosqueShooting #NewZealandShooting

    நியூசிலாந்தில் இன்று மசூதிக்குள் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம ஆசாமிகள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். துப்பாக்கி சூடு நடந்த ஒரு மசூதிக்கு தொழுகை செய்வதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் வந்தனர். அப்போது உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், அவர்களை அதிகாரிகள் மற்றொரு வாசல் வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, அவர்களின் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



    துப்பாக்கி சூடு சம்பத்தில் உயிர்தப்பியது பற்றி அணியின் பல்வேறு வீரர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். “துப்பாக்கியால் சுட்ட நபர்களிடம் இருந்து ஒட்டுமொத்த அணியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது அச்சம் தரும் ஒரு அனுபவம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என துவக்க வீரர் தமிம் இக்பால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    “கடவுள்தான் இன்று எங்களைக் காப்பாற்றினார், நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது.. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.  

    நியூசிலாந்து-வங்கதேச அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting

    ×