search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutritional welfare fund"

    • ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிகள் வழங்கப்பட்டன.
    • 10 பொருட்கள் உள்ளடக்கிய ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தை 16-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிகள் வழங்கப்பட்டன.

    முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமையேற்று பேசினார். நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் வரவேற்றார். இந்நிகழ்வில், தலைமை செவிலியர் லெட்சுமி, விநாயகா கார்மெண்ட்ஸ் பாண்டி, சி அறக்கட்டளை திட்ட உதவியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மை மருத்துவர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சுண்டல், பாசி பயிறு, முட்டை, நிலக்கடலை பருப்பு உட்பட 10 பொருட்கள் உள்ளடக்கிய ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தை 16-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினர். ஊட்டச்சத்து உணவெனும் தலைப்பில் காசநோய் பிரிவு மரிய மெரினா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தொற்றா நோய் பிரிவு சார்பாக, செவிலியர் நித்யா மற்றும் சரண்யா, ஜாக்குலின் மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

    ×