என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrition Festival"

    • 5-வது ஊட்டச்சத்து இருவார விழா இன்று முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடுகிறது.
    • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்தவும் இந்த இரு வார விழாவின் நோக்கமாகும்.

    சேலம்:

    இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக 5-வது ஊட்டச்சத்து இருவார விழா இன்று முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடுகிறது.

    மக்கள் இயக்கம், மக்கள் பங்கேற்பு மூலம் ஊட்டச்சத்தின் முக்கியத்து வத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்தவும் இந்த இரு வார விழாவின் நோக்கமாகும். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து இயக்கம் , மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை முன்னுக்குக் கொண்டு வருவதிலும் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது.

    சேலம் மாவட்டம்

    நடப்பாண்டு 5-வது ஊட்டச்சத்து இருவார விழா சேலம் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் நடத்த பல்வேறு துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி விரைவில் கிரா மங்கள் ேதாறும் ஆரோக்கிய மான ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    ×