என் மலர்
நீங்கள் தேடியது "Nutrient tablets"
- தனியார் பள்ளி ஒன்றில் மேலப்பாளையத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்து மாத்திரைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
நெல்லை:
பாளை பஸ் நிலைய பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மேலப்பாளையத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஒரே ஆட்டோவில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்
சத்து மாத்திரைகள்
நேற்று முன்தினம் அவர்கள் 6 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். அப்போது 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்து மாத்திரைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலப்பாளையத்தை சேர்ந்த 6 சிறுவர்களும் அந்த மாத்திரைகளை வாங்கியு ள்ளனர். அதனை அவர்கள் சாப்பிடாமல் பாக்கெட்டி லேயே வைத்துள்ளனர். மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்காக ஆட்டோ வுக்கு காத்திருந்தனர்.
தண்ணீரில் கலக்கி குடித்தார்
விளையாட்டாக தாங்கள் வைத்திருந்த மாத்திரைகளை தண்ணீர் கலக்கி அதனை சக மாணவருக்கு கொடுத் துள்ளனர். அதனை அந்த மாணவரும் விளையாட்டாக வாங்கி குடித்துள்ளார்.
அதன் பின்னர் அனைவரும் ஆட்டோவில் வீடு திரும்பிவிட்டனர். இந்நிலையில் மறுநாள் அதாவது நேற்று காலை மாத்திரைகளை கலக்கி குடித்த அந்த மாணவனுக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் உடனடியாக அவனை பாளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
இது தொடர்பாக மாணவரிடம் அவரது பெற்றோர் விசாரித்ததில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது. இதையடுத்து இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் நேரில் அழைத்து அவர்களது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு இதுபோன்ற சத்து மாத்திரைகள் கொடுப்பது குறித்து முன்கூட்டியே அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால்தான் குழந்தைகளை கண்காணித்து அவர்கள் மாத்திரைகளை கொடுப்பார்கள். சம்பந்த ப்பட்ட பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
மாத்திரைகள் சாப்பி டுவது குறித்தும் அதிக அளவு மாத்திரை சாப்பிடும்போது ஏற்படும் விபரீதம் குறித்தும் சுகாதார துறையினர் மாண வர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றனர்.






