என் மலர்
நீங்கள் தேடியது "Nurses are under siege"
- இப்பணிக்கு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர்.
- ஆனால் துணை இயக்குனர் இவர்களை பார்க்காமல் சென்று விட்டதால் செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் சுகாதார பணிகள் துணைஇயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு துணை இயக்குனராக வரதராஜன் என்பவர் உள்ளார். இவரிடம் கிராம சுகாதார செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க நேற்று மாலையில் வந்தனர்.
கிராம சுகாதார செவிலியர்களுக்கு புதிய இணையதள பதிவு பணி வழங்கப்பட்டுள்ளதால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர்.
ஆனால் துணை இயக்குனர் இவர்களை பார்க்காமல் சென்று விட்டதாக ெதரிகிறது. இதனால் செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினர். விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் இன்றும் 2ம் நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நிர்மலா தெரிவிக்கையில்,
எங்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்கக்கூட துணை இயக்குனர் மறுத்து வருகிறார். போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரை கொண்டு மிரட்டி வருகின்றனர். மேலும் குற்ற குறிப்பாணையை காட்டியும் மிரட்டுகின்றனர். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இதனால் துணை இயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






