என் மலர்
நீங்கள் தேடியது "Notice to shops"
- நடந்து முடிந்த 2022-ம் ஆண்டிற்கான வாடகை பாக்கியாக ரூ.36 லட்சம் நிலுவையில் உள்ளது.
- இதில் பாக்கி வைத்துள்ள 145 கடைக்காரர்களுக்கு உடனடியாக வாடகை பாக்கித் தொகையை செலுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் நேற்று விநியோகிக்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள கடைகள், தார் சாலை ஓரத்தில் நடுகிலும் உள்ள கடைகள் மற்றும் காலியிடங்கள் வாடகைக்கு விடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த 2022-ம் ஆண்டிற்கான வாடகை பாக்கியாக ரூ.36 லட்சம் நிலுவையில் உள்ளது. இதில் பாக்கி வைத்துள்ள 145 கடைக்காரர்களுக்கு உடனடியாக வாடகை பாக்கித் தொகையை செலுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் நேற்று விநியோகிக்கப்பட்டது.
பேரூராட்சி பணியா ளர்கள் மூலம் தொடர்ந்து மீதம் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாடகை பாக்கி உள்ளவர்கள் உடனடியாக பாக்கி பணத்தை கட்ட வேண்டும் எனவும், தொகையை கட்ட தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






