search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "not contest JuD"

    மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தனது அமைப்பின் சார்பில் 200 வேட்பாளர்களை நிறுத்துகிறார். #PakistanElection #HafizSaeed
    லாகூர்:

    பாகிஸ்தானில் வரும் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் தொகுதிகளில் களப்பணிகளைத் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பும் தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். ஆனால் ஹபீஸ் சயீத் போட்டியிடவில்லை.



    அரசியலில் கால் பதித்துள்ள ஜமாத் உத் தவா, மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சி (ஏஏடி) பெயரில் ஜமாத் உத்தவா வேட்பாளர்களை களமிறக்குகிது.

    இது தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி நன்கு படித்த 200 வேட்பாளர்கள் ஏஏடி-யின் சின்னமான நாற்காலி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததும், கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். #PakistanElection #HafizSaeed

    ×