என் மலர்
நீங்கள் தேடியது "NorthChennai power plant"
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகா வாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இரண்டாவது நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் 1230 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடை பெறுகிறது. கொதிகலன் குழாய் பழுதினை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #ThermalPowerStation






