search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non-licensed companies"

    • அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
    • உரிமத்தை புதுப்பித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 1987-ம் வருட தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பிரிவு 8 (1). 1991-ம் வருட தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) விதிகள் பிரிவு 24,25,27-ன் படி திருப்பூர் விற்பனைக்குழுவின் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை விளைபொருட்களை அடிப்படையாக கொண்டு காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உரிமம் பெற்று இயங்கிவரும் நிறுவனங்கள் உரிமத்தை புதிப்பிக்காமலும், வணிகம் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் மாதாந்திர கணக்கறிக்கையாக சமர்பிக்காமலும், விற்பனைக்கூடத்திற்கு செலுத்த வேண்டிய சந்தைக்கட்டணம் செலுத்தாமலும் உள்ளன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே இம்மாத இறுதிக்குள் (நாளைக்குள்) உரிமம் பெறாத நிறுவனங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம், உரிமம் பெற்று புதிப்பிக்காத நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×