என் மலர்
நீங்கள் தேடியது "NLC Employee wife suicide"
நெய்வேலியில் என்.எல்.சி.ஊழியர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 8-வது வட்டம் குதிரைகாரன் தெரு என்.எல்.சி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி புனிதா (வயது 41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத போது புனிதா சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார்.
விசாரணையில் புனிதாவுக்கு வயிற்று வலி இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.