என் மலர்
நீங்கள் தேடியது "nishan e pakistan award"
பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது சவுதி இளவரசர் பின் சல்மான் அல் சவுதுக்கு இன்று அளிக்கப்பட்டது. #Saudicrownprince #NishanePakistan
இஸ்லாமாபாத்:
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் இஸ்லாமாபாத் வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறை பயணமாக இஸ்லாமாபாத் வந்துள்ளார்.
அவரது முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையில் இன்று சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இன்று மாலை பாகிஸ்தான் அதிபர் மாளிகைக்கு சென்ற முஹம்மது பின் சல்மான் அல் சவுத் அதிபர் ஆரிப் ஆல்வி-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் இம்ரான் கான் உள்ளிட்ட மந்திரிகள் உடன் இருந்தனர். #Saudicrownprince #NishanePakistan






