என் மலர்
நீங்கள் தேடியது "Nigerian prisoner"
செங்குன்றம்:
போலி பாஸ்போட்டு வழக்கில் நைஜீரியா நாட்டை சேர்ந்த நிக் கோலஸ் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை வழக்கு சம்பந்தமாக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு நள்ளிரவில் புழல் ஜெயிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது நிக்கோலஸ் அவரது அறைக்கு போகாமல் போலீஸ்காரருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனை பணியில் இருந்த பிரபாகரன் என்ற போலீசார் கண்டித்து நிக்கோலஸை சிறை அறைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் போலீஸ்காரர் பிரபாகரனை தாக்கி கட்டிப்புரண்டு சண்டை போட்டார். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர்.
பின்னர் காயம் அடைந்த நிக்கோலசை சிகிச்சைக்காக புழல் சிறை மருத்துவ மனையில் சேர்த்தனர். இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews






