என் மலர்

  நீங்கள் தேடியது "Niall O'Brien"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான நீல் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார். #NiallOBrien #Ireland
  அயர்லாந்து அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டு வந்தவர் நீல் ஓ பிரையன் (36). இவர் 134 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த 2002ம் ஆண்டில் இருந்து அயர்லாந்து அணிக்காக விளையாடி வரும் ஓ பிரையன் இதுவரை அயர்லாந்து அணிக்காக மொத்தம் 216 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.  விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இவர் தனது சகோதரர் கெவின் ஓ பிரையனுடன் இணைந்து பல போட்டிகளில் அயர்லாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

  அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த இவர் முதல்தர போட்டிகளில் 9,057 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 19 சதமும், 84 அரைசதங்களும் அடங்கும்.
   
  வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான அயர்லாந்து அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வந்த ஓ பிரையன் திடீரென இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #NiallOBrien #Ireland
  ×