என் மலர்
நீங்கள் தேடியது "NEW WORKS WORTH Rs.2.76 CRORE"
- ரூ.2.76 கோடி மதிப்பில் புதிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்
- சமுதாயக்கூடம் கட்டும் பணிக்குஅடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காரை, கொளக்காநத்தம், நத்தக்காடு, சீராநத்தம், அபினாபுரம், ஜமீன் ஆத்தூர், அணைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2.76 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் காரை முதல் மலையப்பநகர் சாலை வரை ரூ.80 லட்சம் மதிப்பிலும், ச.குடிகாடு சாலை முதல் கொளக்காநத்தம் நத்தக்காடு சாலை வரை ரூ.47.70 லட்சம் மதிப்பிலும், சீராநத்தம் முதல் கரம்பியம் சாலை வரை ரூ.30.50 லட்சம் மதிப்பிலும்,
ஜமீன் ஆத்தூர் முதல் மரவனூர் வரை ரூ.32.50 லட்சம் மதிப்பிலும் என 4 சாலைகளை ரூ.1.90 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து கொளக்காநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொளக்காத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலும், அயினாபுரம் ஊராட்சி அணைப்பாடி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பிலும்,
அயினாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பிலும் என 3 அரசு பள்ளிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.60 லட்சம் மதிப்பில் மேசை, நாற்காலி உள்ளிட்ட தளவாடப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
மேலும் அணைப்பாடி ஆதிதிராவிடர் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்குஅடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார். பின்னர் கொளக்காநத்தம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.






