என் மலர்

  நீங்கள் தேடியது "New salary agreement"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்க தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.
  • சம்பள ஒப்பந்தம் முடிந்து ஒன்றரை மாதமாகியும் புதிய சம்பள ஒப்பந்தம் இழுபறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  அனுப்பர்பாளையம்:

  திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ந் தேதி நிறைவு பெற்றது.

  புதிய சம்பளம் ஒப்பந்தம் குறித்து பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தை ,பின்னர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பித்தளை பாத்திரத்திற்கு 21ந் தேதியும், எவர் சில்வர் பாத்திரத்திற்கு 23ந் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டது.

  எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் நிர்வாக குழு கூட்டம் அனுப்பர்பாளையம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

  தொழில் சூழல் சரியில்லாததால் ஒரு ஆண்டுக்கு பழைய கூலி விகிதத்தையே நடைமுறைப்படுத்த அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்து தேதி சொல்லுங்கள், பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என தொழிற் சங்க கூட்டு கமிட்டிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.சம்பள ஒப்பந்தம் முடிந்து ஒன்றரை மாதமாகியும் புதிய சம்பள ஒப்பந்தம் இழுபறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  ×