search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naval fruit season"

    நத்தம் பகுதியில் நாவல் பழம் சீசன் தொடங்கியது. 1 குறுங்கூடை ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, சீத்தா, இலந்தை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் அந்தந்த பருவகாலங்களில் விளைச்சல் பெற்று அறுவடையாகிறது.

    இதைப்போலவே மிக முக்கியமான பழங்களில் ஒன்றானது நாவல்பழம். இது குறித்து மா, தென்னை, புளி விவசாய சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறுகையில், இந்தபழம் வருடம் ஒரு முறைதான் மகசூல் தரும். மேலும் ஜூலை முதல் வாரத்தில் இந்த நாவல்பழம் பரளி, வத்திபட்டி, முளையூர், மலையூர், காசம்பட்டி, புன்னப்பட்டி, பட்டணம் பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி மற்றும் சேத்தூர் உள்பட பல கிராமங்களில் விவசாயிகளின் பராமரிப் பிலும், மானா வாரியாகவும் இந்த நாவல் மரங்கள் பாதுகாக்கப்பட்டு அதன்மூலம் அறுவடை செய்யப்படும்.

    தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கி உள்ளது. 1 குறுங்கூடை ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதில் 1 படி முதல் 2 படி வரை இருக்கிறது. இதே பழங்கள் சில்லரையாக 1 படி ரூ.200க்கும் 1 கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.

    இந்த பழ சீசன் ஆகஸ்டு மாதம் கடைசி வரை நீடிக்கும். இங்கு விளையும் பழங்கள் திண்டுக்கல், மதுரை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

    ×