search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natham area"

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. சந்தையில் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளன. இந்த வருடம் கடுமையான வறட்சியின் காரணமாக மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் மார்ச் மாத கடைசியில் மாம்பழ சீசன் தொடங்கும்.

    இந்த வருடம் போதுமான ஈரம் பூமியில் இல்லாத காரணத்தால் மா விளைச்சலில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. முதன் முதலாக பாலாமணி மாம்பழ ரகம் நத்தம் சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடையாகி சந்தைக்கு வந்துள்ளது. இந்த பழம் 1 கிலோ மொத்த விலைக்கு ரூ.50க்கும் அதே பழம் சில்லரையாக ரூ.80க்கும் விற்பனையாகிறது.

    தற்போது வரும் இந்த மாம்பழம் இனிப்பும், துவர்ப்பும் வாசமும் நிறைந்துள்ளது. மருத்துவகுணம் நிறைந்த மாம்பழம் நத்தத்தில் கிராக்கியாக விலைபோகிறது. மா விவசாயிகள் இதுகுறித்து கூறியதாவது இந்த வருடம் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் பருவமழை பொய்த்துவிட்டது. ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் மட்டுமே மாமரங்கள் பாதுகாக்கப்படுகிறது. அந்த மாமரங்கள் மட்டுமே விளைச்சலை தந்துள்ளது. மற்ற மரங்கள் விளைச்சல் இன்றி காணப்படுகிறது.

    இந்த மாம்பழ சீசன் வருகிற ஜுன் மாதம் வரை நீடிக்கும், பாலாமணியை தொடர்ந்து கல்லாமை, காசா, இமாம்பசந்து, சப் பட்டை உள்ளிட்ட பல்வேறு மாம்பழரகங்கள் அடுத்தடுத்து விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களாக மழையே பெய்யவில்லை. இதனால் மாமரங்களுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாமல் பட்டுப்போய்விட்டது. 

    இவ்வாறு அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    நத்தம் பகுதியில் நாவல் பழம் சீசன் தொடங்கியது. 1 குறுங்கூடை ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, சீத்தா, இலந்தை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் அந்தந்த பருவகாலங்களில் விளைச்சல் பெற்று அறுவடையாகிறது.

    இதைப்போலவே மிக முக்கியமான பழங்களில் ஒன்றானது நாவல்பழம். இது குறித்து மா, தென்னை, புளி விவசாய சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறுகையில், இந்தபழம் வருடம் ஒரு முறைதான் மகசூல் தரும். மேலும் ஜூலை முதல் வாரத்தில் இந்த நாவல்பழம் பரளி, வத்திபட்டி, முளையூர், மலையூர், காசம்பட்டி, புன்னப்பட்டி, பட்டணம் பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி மற்றும் சேத்தூர் உள்பட பல கிராமங்களில் விவசாயிகளின் பராமரிப் பிலும், மானா வாரியாகவும் இந்த நாவல் மரங்கள் பாதுகாக்கப்பட்டு அதன்மூலம் அறுவடை செய்யப்படும்.

    தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கி உள்ளது. 1 குறுங்கூடை ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதில் 1 படி முதல் 2 படி வரை இருக்கிறது. இதே பழங்கள் சில்லரையாக 1 படி ரூ.200க்கும் 1 கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.

    இந்த பழ சீசன் ஆகஸ்டு மாதம் கடைசி வரை நீடிக்கும். இங்கு விளையும் பழங்கள் திண்டுக்கல், மதுரை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

    ×