என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Youth Athletics"

    • தேசிய இளையோர் தடகள சாம்பயின்ஷிப் போட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று தொடங்கியது.
    • பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் எட்வினா ஜேசன் 55.86 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    பாட்னா:

    தேசிய இளையோர் தடகள சாம்பயின்ஷிப் போட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் 5 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் உத்தரபிரதேச வீரர் நிதின் குப்தா 19 நிமிடம் 24.48 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    கடந்த ஆண்டு புவனேஷ்வரில் நடந்த தடகள போட்டியில் 20 நிமிடம் 01.64 வினாடிகளில் இலக்கை எட்டியிருந்த அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து இருக்கிறார்.

    பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் எட்வினா ஜேசன் 55.86 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அரியானா வீராங்கனைகள் தன்னு (56.06 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், தீபிகா (56.47 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஒட்டபந்தயத்தில் அரியானாவின் ஆர்த்தி 12.23 வினாடிகளில் வந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவருக்கு அடுத்தபடியாக பிரிஷா முஷ்ரா (அரியானா) 12.24 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தை பிடித்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கர்நாடக வீரர் சிராந்த் (10.89 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழகத்தின் பிரெட்ரிக் ரஸ்செல் (11.04 வினாடி) வெள்ளிப்பதக்கமும், பீகாரின் திவ்யான்ஷ் குமார் ராஜ் (11.08 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

    குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் கே.கோகுல் தங்கப்பதக்கம் வென்றார். #NationalYouthAthletics
    சென்னை:

    15-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வடோதராவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ போட்டியில் தமிழக வீரர் கே.கோகுல் 15.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தபிதா 14.10 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 14.08 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த கேரளா வீராங்கனை அபர்ணா ராய் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    பதக்கம் வென்றதன் மூலம் கோகுல், தபிதா ஆகியோர் உலக இளையோர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் இருவரும் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.  #NationalYouthAthletics
    ×