என் மலர்

  நீங்கள் தேடியது "National Minority People's Movement"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூய பவுல் ஆலயத்தின் இணை ஆயர் பால்டேவிஸ் பிரார்த்தனை செய்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • அரசுகள் வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  திருப்பூர் :

  தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் (கட்சி) திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தூய பவுல் ஆலயத்தின் இணை ஆயர் பால்டேவிஸ் பிரார்த்தனை செய்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெபரூபன் ஜான்சன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ப்ராங்க் பரிமள்ராஜ் வரவேற்றார். தேசிய செயலாளர் பிரசாத் தேவசித்தம், தேசிய பொதுச்செயலாளர் வனிதா, மாநில சிறப்பு செயலாளர் ஜான் ஜேக்கப், மாநில பொதுச்செயலாளர் விக்டர் ராமசாமி, மாநில செயலாளர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஜே.ஜோயல் சுந்தர்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கியும், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கியும் பேசினார்.

  கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது, வரும் ஜுலை மாதத்திற்குள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நகர, ஒன்றிய, வார்டு உள்பட அனைத்து நிர்வாகிகளையும் நியமிப்பது, சிறுபான்மை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நமது கட்சி சார்பில் அதைப் பெற்று தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் கில்பர்ட் ராஜன் நன்றி கூறினார்.

  ×