search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Kalari Competition"

    • 37 -வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
    • பணி நிறைவு அலுவலர் கணேசன் , சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    உடுமலை:

    இந்திய அணி சார்பாக 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 37 -வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் களரி போட்டிகள் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 12மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேஷன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்டஸ் அறக்கட்டளை சார்பில் ஆசான் வீரமணி தலைமையில் தமிழ்நாடு அணிக்காக 8 பேர் பங்கேற்கின்றனர்.

    இவர்கள் உடுமலையிலிருந்து ெரயில் மூலம் கோவை சென்று கோவையில் இருந்து ெரயில் மூலம் கோவா செல்கின்றனர். கோவா செல்லும் களரி வீரர்கள் உடுமலையிலிருந்து வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு, மடத்துக்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் வடிவேல், பணி நிறைவு அலுவலர் கணேசன் , சமூக ஆர்வலர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    ×