search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Food Day"

    • உணவுகளின் சுவை, தயாரிப்பு முறை மற்றும் அதன் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர்.
    • பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய காலை வழிபாட்டு நிகழ்வை 1-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பித்தனர். அவர்கள் உணவின் முக்கியத்துவம் குறித்தும் நமது உடலைப் பாதுகாக்க தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளான பழங்கள், காய்கறிகள், திணை வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை எவ்வாறு நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தேசிய உணவு தினத்தை முன்னிட்டு வகுப்பு வாரியாக மாணவர்ளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

    1 முதல் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரட் பயன்படுத்தி வடிவங்கள் உருவாக்குதல். 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் பயன்படுத்தி சாலட் தயாரித்தல் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு நெருப்பின்றி உணவு தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது.

    உணவுகளின் சுவை, தயாரிப்பு முறை மற்றும் அதன் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர். மேலும் அதனைப் பார்வையிட தகுந்தபடி முறையாக அழகுபடுத்தி வைத்திருந்தனர்.

    இவற்றை பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பார்வையிட்டு சிறப்பாக உணவு தயாரித்து விளக்கவுரை அளித்த மாணவர்களை தேர்ந்தெ டுத்து அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    ×