search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naraikinaru"

    • தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தின் மூலமாக மரு தன்வாழ்வு, நாரைக்கிணறு, என்.புதூர், கே.கைலாசபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உட்பட ஏராளமானவர்கள் பயன் அடைந்து வந்தனர்.
    • கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பாசஞ்சர் ரெயில்கள் ஊரடங்கிற்கு பிறகு நிற்காது என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    கோவில்பட்டி:

    புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தென்னக ரெயில்வேயின் மதுரை ேகாட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தின் மூலமாக மரு தன்வாழ்வு, நாரைக்கிணறு, என்.புதூர், கே.கைலாசபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உட்பட ஏராளமானவர்கள் பயன் அடைந்து வந்தனர்.

    ஆனால், கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பாசஞ்சர் ரெயில்கள் ஊரடங்கிற்கு பிறகு நிற்காது என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனால் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்த இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர்

    எனவே பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி இந்த வழித்தடத்தில் நின்று சென்ற அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் வழக்கம்போல் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக போரா ட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தோம்.

    இந்நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று பயணிகளின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் தூத்துக்குடி, நெல்லை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதன்படி தூத்துக்குடி-நெல்லை சிறப்பு ரெயில் (வண்டி எண்:06667) மற்றும் நெல்லை-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்:06668) ஆகிய ரெயில்கள் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் இரவு 7.15 மணிக்கும், காலை 8 மணிக்கும் நின்று செல்லும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் நாரைக்கிணறு ரெயில் நிலை யத்தில் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்ல வழிவகுத்த வருவாய்துறையினர், தென்னக ரெயில்வே நிர்வாகத்தினருக்கும், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச்செயலாளர் கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் மருத ன்வாழ்வு ரவி, ஒன்றிய செயலாளர்(மேற்கு) ஜே.சி.பி. முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்க ளுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    ×