என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanganchiyar bridge damaged"

    • இடையகோட்டையில் நங்காஞ்சியாற்றுக்கு குறுக்கே கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து இடையகோட்டை வழியாக கரூர் வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தார் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இதில் இடையகோட்டையில் நங்காஞ்சியாற்றுக்கு குறுக்கே கடந்த 25 வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தை கடந்துதான் கோயமுத்தூர், மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், கரூர், பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

    பாலம் வழியாக ஏராளமான பஸ், லாரி, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது.

    பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் பாலத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது.

    இந்த பாலத்தில் அதிக பாரம் கொண்ட லாரிகள் கடந்து செல்லும்போது இடிந்து விடுமோ என்ற அச்சத்தோடு வாகன ஓட்டிகள் கடந்து செல்கிறார்கள்.

    எனவே இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×