என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthali Palayam Panchayat"

    • சக்தி நகர் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தைஅமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • கந்தவேல், மகேஸ்வரன் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் ஈரோடு நாடாளுமன்றஉறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலையில் தமிழ்நாடு அரசு மானியத்துடன்ரூ.13.95 கோடி மதிப்பீட்டில் அமராவதி காயர் புரொடியூசர் கம்பெனி கட்டும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு ஊரகதொழில்துறையின் சார்பில் கயிறு குழுமம் பொது வசதி மையம் என்கின்ற வகையில் அமராவதிகாயர் புரொடியூசர் கம்பெனி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊதியூர் முதலிபாளையம்ஊராட்சியிலே அமையவிருக்கின்றது. இதில் தமிழ்நாடு அரசின் பங்குத்தொகையாக ரூ.8.75கோடியும், பங்குதாரர்களின் தொகையாக ரூ.5.20 கோடியும் சேர்த்து மொத்தமாக சுமார் ரூ.13.95கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டடம் கட்டும் பணிகள் இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் காயர் யான், காயர் மேட்டிங், காயர்ஜியோ டெக்ஸ்டைல், ரப்பர் மோல்டு காயர் டோர் மேட், லேடெக்ஸ் காயர் தரை விரிப்பு, காயர்பைபர் மற்றும் காயர் யான் டையிங் போன்ற மதிப்பு கூட்டும் பொருட்கள் எல்லாம்இந்நிறுவனத்தின் மூலம் தயாரித்து ஊரக தொழில் என்ற முறையில் பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க இருக்கின்றது.

    அந்த வகையில் இந்த பொருட்கள் எல்லாம்வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்பொழுது அந்நிய செலவானி ஈட்டுவதற்கு வாய்ப்புஏற்படுவதனால் தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.விவசாயத்தை சார்ந்த தொழில் நிறுவனமாக இருக்கின்றது. இதுவரை வீணாக சென்றுகொண்டிருந்த தேங்காய் நாறுகள் எல்லாம் இன்றைக்கு மக்களுடைய பயன்பாட்டிற்கு மதிப்புகூட்டும் பொருளாக உற்பத்தி செய்யக்கூடிய நல்ல வாய்ப்பாக இருக்கின்றது. மேலும் இந்தபகுதியில் இருக்கக்கூடிய நபர்களுக்கு வேலைவாய்ப்பினையும், பொருளாதாரத்தையும்நிச்சயமாக அதிகரித்து தரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

    பின்னர் காங்கயம் நகராட்சி, தாராபுரம் சாலை, சக்தி நகர் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தைஅமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், காங்கேயம்நகராட்சி ஆணையாளர் வெங்கடேசன், அமராவதி புரொடியூசர் கம்பெனி லிமிடெட் தலைவர் சந்திரசேகர், இயக்குநர்கள் சரவணவேல், கார்த்திக், கந்தவேல், மகேஸ்வரன் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×