என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "muthaiyapuram police station"

    தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின்பு பதட்டம் நிலவுகிறது. இதனால் வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    என்றாலும் நேற்று காலையில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒருவர் பலியானார். இதையடுத்து அமைதியை ஏற்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வதந்திகளை நம்பவேண்டாம் அமைதி ஏற்படுத்த போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    என்றாலும் பலத்த பாதுகாப்பையும் மீறி இன்றும் தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.

    இதில் போலீஸ் நிலையத்தின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனே போலீசார் ஓடி வந்து தீயை அணைத்தார்கள். அதற்குள் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர்.

    முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் தான் கலவரம் தொடர்பாக கைதானவர்கள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

    நெல்லையில் நேற்று நள்ளிரவில் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் 4 அரசு பஸ்கள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. அதிகாலை 3 மணிக்கு கே.டி.சி. நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. உடனடியாக காவலாளிகள் சென்று தீயை அணைத்தனர். இதனால் சேதம் ஏதும் இல்லை. #ThoothukudiFiring
    ×