search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murali vijaya"

    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன் என்று கங்குலி கூறியுள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    புதுடெல்லி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்களாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவானின் மோசமான ஆட்டம் காரணமாக இந்த கேள்வி எழுகிறது.

    எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தவான் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இரண்டு இன்னிங்சிலும் அவர் ‘டக்’ அவுட் ஆனார். பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளத்தில் அவர் சிறப்பாக ஆட முடியாததால் ஏமாற்றமே.

    இந்த பயிற்சி ஆட்டத்தில் முரளிவிஜய், வீராட்கோலி தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் அடித்து இருந்தனர்.

    தவானின் மோசமான ‘பார்ம்’ காரணமாக அவர் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளி விஜய்யையும், லோகேஷ் ராகுலையும் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனை யாளருமான கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வெளிநாடுகளில் தவான் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது இல்லை. அவர் ரன்களை குவித்ததில்லை என்று சாதனைகள் சொல்கிறது.

    தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா எதுவாக இருந்தாலும் அவர் சரியாக ஆடவில்லை. தவானை பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்.

    டெஸ்ட் போட்டியில் அவர் உள்நாட்டில் மட்டுமே தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்திய மண்ணில் சதம் அடித்ததை வைத்து அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்குவது சுவாரசியமே.


    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    இதேபோல 3-வது வரிசையில் ஆடும் புஜாராவும் திணறி வருகிறார். 11 பேர் கொண்ட அணிக்கு அவர் தகுதியானவர் என்று இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் டாரன்காக் தெரிவித்துள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    ×