search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Emergency Meeting"

    • தாரமங்கலம் நகராட்சி அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அரசு பிறப்பித்துள்ள ஆணையின் படி நகராட்சி வார்டு பகுதியில் வார்டு குழு மற்றும் பகுதி சபா அமைக்க உள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அரசு பிறப்பித்துள்ள ஆணையின் படி நகராட்சி வார்டு பகுதி–யில் வார்டு குழு மற்றும் பகுதி சபா அமைக்க உள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டிலும் 4 குழு அமைத்து 4 குழுவுக்கும் ஒரு உறுப்பினர் நியமனம் செய்யவும் அந்த குழுவுக்கு அந்தந்த வார்டு உறுப்பினரே தலைவராகவும் செயல்படுவார்.

    இந்த வார்டு குழு மற்றும் பகுதி சபா மூலம் அந்தந்த பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதனை நிறைவேற்றிடவும், வார்டு பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை உருவாக்கவும் ஏதுவாக அமையும்.

    அதேபோல் நகராட்சி வருவாய் இனங்கள் நிலுவையில் உள்ள வரி கட்டணங்கள் போன்றவை வசூலிக்கவும் இந்த சபா வாயிலாக பொது–மக்களுக்கு அறிவுறுத்தபடும் என்று கூறப்படுகிறது. இந்த சபாவில் நிறைவேற்றபடும் தீர்மா–னங்கள் மன்ற கூட்டத்தில் வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளிலும் 4 குழுக்கள் வீதம் 108 குழுக்கள் அமைக்கப்படும், இந்த கூட்டம் வருகிற 1 -ந் தேதி முதல் நடைபெறும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கபட்டது.

    அவசர கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சின்னு–சாமி, வி.சி.க. உறுப்பினர் சின்னுசாமி, சுயேட்சை உறுப்பினர் ஜெயந்தி ஆகியோரை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ×