search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "More than 300 families live there."

    • தனி வருவாய் கிராமமாக கொண்டையங் குப்பத்தை அறிவிக்ககோரி நடந்தது
    • போக்குவரத்தை மாற்றிய இடத்திலும் திரண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொண்டையங்குப்பம் கிராமம் நல்லூர் கிராமத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் ஏரியிலிருந்து வருவாயும் மற்ற இதர வருவாய் கொண்டையங்குப்பம் கிராமத்திற்கு கிடைக்க வில்லை எனக்கூறி கடந்த 15 ஆண்டுகளாக கொண்டை யங்குப்பம் கிராமத்தை நல்லூர் கிராமத்தில் இருந்து பிரித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை கலெக்டரிடம்மற்றும் வந்தவாசி தாசில்தாரிடம்புகார் மனு அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வந்தவாசி திண்டிவனம் சாலையில் உள்ள திரேசாபுரம் கிராமம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது சம்பவ இடத்திற்குச் வந்த போலீசார் வாகனங்கள் வேறு வழி பாதைக்கு மாற்றினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்று சு காட்டேரி என்ற கிராமம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி திண்டிவனம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் செய்யாறு கோட்டாட்சியர் வினோத்குமார் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×