search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "More than 20 families have built houses for 50 years"

    • கடந்த 20 ஆண்டுகளுக்கு எங்கள் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் மாற்று பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல தனி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தொளசம்பட்டி அருகே யுள்ள சோளிகவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளாக 20 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த பகுதி நீர் நிலை புறம்போக்கு நிலம் என்பதால், எங்களது குடியிருப்புகளை அப்புறப் படுத்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு எங்கள் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் மாற்று பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்காமல், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக தெரிகிறது.இந்த இடத்தில் எங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும், பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போரடி வருகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம், அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கின்றனர். ஆனால், மீண்டும் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இதேபோல 20 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்காமல் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். இந்தநிலையில், ஓமலூர் வட்டாட்சியர் அலு வலகத்திற்கு பாதிக்கப்பட்ட 20 குடும்பத்தினரும் திரண்டு வந்தனர்.அங்குள்ள ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் நல தனி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் செவ்வாய்க்கிழமை தாசில்தார் நேரடியாக இடத்திற்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்தனர். இதை யடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். பொதுமக்கள் குடும்பத்து டன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

    ×