search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkey pox panic"

    • இந்தியாவிலேயே கேரளாவில் தான் குரங்கு அம்மை தொற்று அதிக நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • அதன்படி போடி முந்தல் சோதனைச்சாவடியில் கேரளாவிலிருந்து வரும் பஸ்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொது சுகாதாரத் துறை மூலம் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனோ, சிக்குன்குனியா, பறவைக் காய்ச்சல் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்பொழுது குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலேேய கேரளாவில் தான் குரங்கு அம்மை தொற்று அதிக நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் இந்நோய் தமிழக பகுதியில் பரவாமல் தடுக்க தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் ஐ.நா சபையும் குரங்கு அம்மை நோயை தீவிர தொற்று பரவும் நோயாக அறிவித்துள்ளபடியால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக-கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி போடி முந்தல் சோதனைச்சாவடியில் கேரளாவிலிருந்து வரும் பஸ்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொது சுகாதாரத் துறை மூலம் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏல விவசாயம் அதிகம் நடைபெறுவதால் தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜீப்புகளில் சென்று வேலை செய்து திரும்புகின்றனர்.

    இதனால் தேனி மாவட்டத்தில் குரங்கு அம்மை வராமல் தடுப்பதற்காக போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முந்தலில் சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு அதிகப்படியான சுற்றுலா வாகனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் வாகனங்கள் வந்து செல்வதால் முறையாக வாகனங்களைஆய்வு செய்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×