search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monitoring Centre"

    • தஞ்சாவூர் மாநகராட்சியின் ஓராண்டு சாதனைகள் அடங்கிய கையேடு வீடு தோறும் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
    • மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ள தாய் சேய் நல கண்காணிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியின் ஓராண்டு சாதனைகள் 2022-23 அடங்கிய கையேடு இன்று வீடு தோறும் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

    தஞ்சாவூர் மங்களபுரம் முருகன் கோவில் அருகில் இருந்து ஓராண்டு சாதனைகள் கையேடு வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மாநகராட்சி ஓராண்டு சாதனை கையேட்டை வழங்கினார்.

    அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு நடந்தே சென்று கையேட்டை வழங்கினார்.

    இது குறித்து மேயர் சண்.ராமநாதன் கூறும்போது :-

    தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி பொறுப்பேற்றேன். எனது ஓராண்டு பணிக்காலத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து விதமான பொதுமக்களுக்கும் தேவைப்படும் வகையில் பொதுமக்களின் தேவை அறிந்து மாநகர வளர்ச்சியின் தேவையறிந்து எதிர்கால மாநகராட்சியின் முன்னேற்றத்தினை மனதில் வைத்துக்கொண்டு உரிய நேரத்தில் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து மக்கள் நலப்பணிகள், திட்டப்பணிகள், முன்னேற்ற பணிகள் ஆகியவற்றை முன்னின்று நடத்தி வைத்துள்ளேன்.

    இந்த ஓராண்டு சாதனை கையேட்டில், மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ள தாய் சேய் நல கண்காணிப்பு மையம், மக்கள் தங்களது குறைகளை பதிவு செய்ய செயலி, 30 ஆண்டுகளுக்கு மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லாத அளவுக்கு தொடங்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டம்,

    பல்வேறு வசதிகளுடன் காமராஜர் மார்க்கெட் திறக்கபட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்து இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இவைகள் அனைத்தும் ஓராண்டில் செய்த சாதனைகள். தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பல்வேறு முன்னேற்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    . மேலும் சிறந்த மாநகராட்சியாகவும் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறந்த மாநகராட்சிக்கான விருதும் கிடைத்துள்ளது. மேலும் இந்த கையேட்டில் 51 வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களின் செல்போன் எண்ணும் இடம் பெற்றுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×