search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moksha"

    • ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்கவும் காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இன்றி பரமத்தி வேலூர் காசிவிஸ்வநாதர் ஆலய காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்கவும் காவிரி தாய் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு படையலிட்டு நன்றி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும்,பக்தர்களும் இன்றி பரமத்தி வேலூர் காசிவிஸ்வநாதர் ஆலய காவிரி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நாடும்,நாட்டு மக்களும் நலம் பெறவும்,விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பொழியவும் வேண்டி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து மோட்ச தீபம் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி புதிய பாலத்தில் இருந்து மோட்ச தீபத்தை பார்த்து ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என பயபக்தியுடன் பொதுமக்கள் வழிபட்டனர்.

    மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் ஏராளமான போலீசார் காவிரி கரையோர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×