என் மலர்
நீங்கள் தேடியது "Minister chakarapani speech"
- ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார் என பேசினார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.23 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதன்படி, எல்ல ப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்லப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணிகள், ரூ.10.84 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுதல், ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்தல், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மார்க்கம்பட்டி ஊராட்சியில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ஐ.வாடிப்பட்டி ஊராட்சியில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ஓடைப்பட்டி ஊராட்சியில் ரூ.10.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகள், குத்திலியப்பை ஊராட்சியில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிகள், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்தல் பணிகள் ஆகிய பணிகளை அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பேசியதாவது:-
ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் காவிரி ஆற்றில் இருந்து தனித் திட்டம் கொண்டு வர ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதன் மூலம் கிராமப்பகுதி மக்கள் அனைவருக்கும் சுகாதார மான குடிநீர் கிடைக்கும். 2 ஆயிரம் கி.மீ தூரத்துக்கான சாலைப்பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒட்டன்சத்திரம் சட்மன்ற தொகுதிக்கு மட்டும் 100 கி.மீ சாலை அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஒட்ட ன்சத்திரத்தில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. மேலும் 6.40 லட்சம் மரக்கன்றுகள் இடையகோட்டை பகுதியில் நடவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு ள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார். காலை உணவு திட்டம் விரைவில் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவி களையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யம்மாள், ஜோதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் பொன்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணை த்தலைவர் ராஜாமணி, வட்டாட்சியர் முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அந்தோணியார் உட்பட பலர் கலந்துகொண்ட னர்.






