search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milos Raonic"

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் காலிறுதிக்கு முன்னேறினார். #Cincinnati #MilosRaonic
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7-6 (8-6), 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் பாப்லோ கார்ரினோ பஸ்தா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை வீழ்த்தி காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-7 (8-10), 2-6 என்ற நேர்செட்டில் 15-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டென்சிடம் (பெல்ஜியம்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்சிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.


    இன்னொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். கிவிடோவா (செக் குடியரசு), லிசி சுரென்கோ (உக்ரைன்) ஆகியோரும் வெற்றி பெற்று காலிறுதியை எட்டினர்.

    மழையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்த 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா தாம்ஜனோவிக்கை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மழை காரணமாக சில ஆட்டங்கள் மறுநாளைக்கு தள்ளிவைக்கப்பட்டன. #Cincinnati #MilosRaonic
    செம்மண் தரை டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் தொடரில் இருந்து கனடா வீரர் ரயோனிக் காயத்தால் விலகியுள்ளார். #FrenchOpen
    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் அடுத்த வாரம் 27-ந்தேதி தொடங்கி ஜூன் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இன்றிலிருந்து தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில் முன்னாள் நம்பர் 3 வீரரான மிலோஸ் ரயோனிக் முழங்கால் காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த மாதம் தொடக்கத்தில் மாட்ரிட் ஓபன் நடைபெற்றது. அப்போது டெனிஸ் ஷபோவாலோவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தார். அதில் இருந்து ரயோனிக் விளையாடவில்லை. ரயோனிக் 2014 பிரெஞ்ச் ஓபனில் காலிறுதி வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×