search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mi 9"

    சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.



    சியோமி நிறுவனம் விரைவில் Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் வெளியீட்டு முன் அதன் புகைப்படத்தை அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டிருக்கிறது. அதில் புதிய சியோமி ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், கிரேடியண்ட் வடிவைப்பு கொண்டிருப்பது உறுதியாகி விட்டது.

    புகைப்படத்துடன் ஸ்மார்ட்போனின் பெயரை கண்டுபிடிக்க சியோமி தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வழங்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. புதிய Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், Mi 9டி ஸ்மார்ட்போன் தாய்லாந்து மற்றும் தாய்வானில் சான்று பெற்றிருக்கிறது.



    சியோமி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சியோமி Mi 9 ஃபிளாக்‌ஷிப் மாடலின் ஸ்டேன்டர்டு வேரியண்ட்டில் கிரேடியன்ட் வடிவமைப்பு, மூன்று பிரைமரி கேமரா சென்சார் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் கிரேடியன்ட் ஃபினிஷ் பார்க்க ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் ஓசன் புளு வேரியண்ட் போன்று காட்சியளிக்கிறது.

    சியோமியின் புதிய Mi 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு, பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. Mi 9 ஸ்டான்டர்டு வேரியண்ட் வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், சியோமி Mi 9டி ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் NBTC சான்றிதழயைும், தாய்வானில் NCC சான்றையும் சமீபத்தில் பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் Mi 9டி என்ற பெயரில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான Mi 9 மாடலில் அதிநவீன தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. #XiaomiMi9 #Smartphone



    சியோமி நிறுவனம் தனது Mi 9ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஸ்மார்ட்போனின் பேக் பேனல் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

    தற்சமயம் சியோமியின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் Mi 9 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதில் ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் எஃபெக்ட் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற அம்சம் ஹூவாய் மேட் 20 ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றிருந்தது.

    புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் பிரத்யேக நிறத்தை பெற லேசர் ஹாலோகிராஃபிக் வழிமுறை மற்றும் டபுள்-லேயர் கோட்டிங் பயன்படுத்தப்பட்டதாக சியோமி தெரிவித்துள்ளது. புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வழக்கமான சென்சார், டெப்த் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 48 எம்.பி. சோனி IMX486 பிரைமரி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,335) முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவில் கடந்த வாரம் விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஒரு வாரத்திற்குள் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையானதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சீனாவில் மட்டும் ரெட்மி நோட் 7 விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.
    ×