search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dum"

    • நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரித்து வருகிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் நேற்று முன்தினம் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 85 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தற்போது 1,45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேட்டூர் அணை நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்திருந்தனர்.

    நீர் திறப்பைத் தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    ×