search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant Petition"

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • 15 -வது வார்டு பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாநகராட்சி உதவி கமிஷனர் (நிர்வாகம்்) வெங்கட்ராமன் கலந்து கொண்டு பொது மக்களிட–மிருந்து மனுக்களை பெற்றார்.

    15 -வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அந்த வார்டுக்கு உட்பட்ட வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பாளையங்கோட்டை நகர தொழில் வர்த்தக சங்கத்தினர் ஏராளமானார் திரண்டு வந்து அளித்த மனுவில் பாளை மார்க்கெட்டில் மொத்தம் 540 கடைகள் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது அந்த கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணி தொடங்க உள்ளது. இதனை ஒட்டி அங்குள்ள வியா பாரிகளுக்கு தற்காலி கமாக ஜவகர் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் 170 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ளவர்களுக்கு கடை அமைக்கப்படவில்லை. தற்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கடைகளை காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனர். எங்களுக்கு மாற்றுக் கடைகள் ஏற்பாடு செய்து தந்த பின்னரே கடையை காலி செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

    தியாகராஜ நகரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், மகாராஜா நகர் மேம்பாலம் அமைந்துள்ள இடத்திற்கும் உழவர் சந்தை உள்ள இடத்துக்கும் இடையே செல்லும் பாதையில் சிலர் தள்ளு வண்டிகளில் கடைகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதனால் தேவையற்ற சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ×