search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mental health is affected"

    • நிலம் அளக்க முயன்ற போது அப்பகுதியில் முகம் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது.
    • அவர் கடந்த சில நாட்களாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்த துயரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்காடு:

    ஏற்காடு காவல்நிலைய குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அளவையர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு டிப்ரவரி சாலையில் உள்ள மலை உச்சிக்கு சென்றனர்.

    நிலம் அளக்க முயன்ற போது அப்பகுதியில் முகம் அழுகிய நிலையில் ஆண் பிணம் காணப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் கொண்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது உடைமைகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்காடு பட்டிப்பாடி நீடூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தம்பிராஜா (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில நாட்களாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்த துயரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    தம்பிராஜா எதற்காக வனப்பகுதிக்கு சென்றார்? அவர் எப்படி இறந்தார்? தற்கொலை செய்தாரா அல்லது கொலைசெய்யப்பட்டாரா? எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தம்பிராஜா சாவில் மர்மம் நீடிக்கிறது.

    ×