search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "members tributes"

    புதுவை சட்டசபை இன்று கூடியது. சட்டமன்றத்தில் முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் முன்மொழியப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

    சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். சட்டமன்றத்தில் முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி, மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஐ.நா. பொதுச்செயலாளர் கோபிஅன்னான், புதுவை முன்னாள் அமைச்சர் காசிலிங்கம் ஆகியோருக்கான இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    இரங்கல் தீர்மானத்தின் மீது தி.மு.க. உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், காங்கிரஸ் உறுப்பினர் பாலன், பா.ஜனதா உறுப்பினர் செல்வகணபதி, தி.மு.க. உறுப்பினர் கீதாஆனந்தன், பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கர், சாமிநாதன், அ.தி.மு.க. உறுப்பினர் அசனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பேசினர்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கமும், இரங்கல் தீர்மானத்தின் மீது தனது கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். இதைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தும் படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த தலைவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். #PondicherryAssembly
    ×