search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayors program in search of people"

    • மண்டலம்-1-க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
    • கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயன் அடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளைகளையும் பொருட்டு, "மக்களைத் தேடி மேயர்" திட்டம் 3.5.2023 அன்று மண்டலம்-5-ல் தொடங்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், 31.5.2023 அன்று மண்டலம்-6-லும், 5.7.2023 அன்று மண்டலம்-13-லும் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் 10.8.2023 அன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா மண்டலம்-1-க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

    எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-1க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில் வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயன் அடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×