என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MAYON CHARIOT CAME T PERAMBALUR"

    • மாயோன் ரத யாத்திரை நேற்று பெரம்பலூருக்கு வந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    பெரம்பலூர்:

    தமிழர்களின் ஆன்மீக அறிவியலை கொண்டாடும் வகையில் சிலை கடத்தல், புதையல் வேட்டை பற்றி மாயோன் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக பெருமாள் சிலையுடன் கூடிய ரத யாத்திரை தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது. இந்த ரதயாத்திரை கடந்த 5ம்தேதி சென்னையில் தொடங்கியது.

    இந்த ரத யாத்திரை நேற்று பெரம்பலூருக்கு வந்தது. ரத யாத்திரைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரையின் நோக்கம் ஒரு நேர் மறை எண்ணத்தை பரப்புவது, அனைவரையும் நேசி, யாரையும் வெறுக்காதே என்ற கருத்தை மக்களை ஏற்க செய்வது என்கின்றனர் ரதயாத்திரை அமைப்பு குழுவினர்.

    ×