search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayakkutha Perumal Temple"

    • நவதிருப்பதி கோவில்களில் 6-வது கோவிலான பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
    • நேற்று காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் சாத்து முறை நடந்தது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6-வது கோவிலான பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தொடங்கி 11நாட்கள் பிரமோற்சவ விழா நடைபெறும். அதேபோல் நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 5.30 மணிக்கு திருமஞ்சனம். 6. மணிக்கு தீபாராதனை. 6.45 மணிக்கு நித்தியல். 7.45 மணிக்கு சுவாமி மாயக்கூத்த பெருமாள் தாயார்களுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். 8.15 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதி சுற்றி வந்தது. 8.40 மணிக்கு அர்ச்சகர் சுந்தரம் கொடி ஏற்றினார்.

    தினமும் காலை தோளுக்கினி யானில் வீதி புறப்படும் மாலையில் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், குதிரை வாகனம். சந்திரபிரபை வாகனம் பல்லக்கு வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் வீதி உலா வருகிறார்.

    பின்னர் தெப்ப உற்சவம், புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. நேற்று காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் சாத்து முறை நடந்தது. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு பரங்கி நாற்காலியில் வீதி புறப்பாடு நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் வெங்கடேசன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோகநாயகி, ஆத்தான் கீழத்திருமாளிகை ராமானுஜம் சுவாமி, ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம், அஸ்வின், கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடா ச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ குளந்தைவல்லித் தாயார் கைங்கர்யம் சபாவின் செய்துள்ளனர்.

    ×