search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mark sheets"

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 21-ம் தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். #Plus2Result #HSCResult #+2Result
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.



    21-ந் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 21-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.

    விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

    விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு அடுத்த(ஜூன்) மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.  #Plus2Result  #HSCResult #+2Result
    ×