search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mariamman temple Kumbabhishekam"

    • நத்தம் அருகே செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • அங்கு ராஜகோபுரம், மூலவர் கோபுர கலசங்களில் புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூரில் செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல்நாள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. பின்னர் கோவில்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பூஜைகள் முதல் 2 நாட்கள் நடந்தது.

    தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு ராஜகோபுரம், மூலவர் கோபுர கலசங்களில் புனித தீர்த்தம் குடம் குடமாக ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.

    கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் , முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரிகுமார், உலுப்பகுடி பால்பண்ணை தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சேத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×