search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandatory wearing of face mask. Shop for social space."

    • வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தயார்
    • கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

    வேலூர் :

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று வேலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய வார்டுகள் தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    அதிகபட்சமாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

    இது தவிர ராணிப்பேட்டை மாவட்டத்தில் 350 படுக்கைகளும், திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா 200 படுக்கைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து தாலுகா ஆஸ்பத்திரியிலும் 10 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனால் இதுவரை ஆஸ்பத்திரியில் அதிகளவில் சிகிச்சைக்கு வரவில்லை. இது ஒருபுறமிருக்க கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தி வருகின்றனர்.

    தற்போது வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டத்திலும் தினமும் சராசரியாக 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    சென்னை பெங்களூரு கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வந்தவர்கள், வேலூருக்கு வரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மூலம் கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    காட்பாடி, குடியாத்தம், ஜோலார்பேட்டை, வாலாஜா, ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் போன்ற முக்கியரெயில் நிலையங்களில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளை பரிசோதிக்கவும், நோய்த்தொற்றின் சந்தேகத்திற்குரிய அறிகுறிகளுக்காக, தடுப்பூசியும் அங்கு செலுத்த பட உள்ளதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×