என் மலர்
நீங்கள் தேடியது "manager was attacked"
- தனது மோட்டார் சைக்கிளை தாடிச்சேரி ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அதனை எடுத்துச் செல்ல முயன்றனர்.
- எதற்காக எனது பைக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டி, தாக்கி அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ெசல்போனை பறித்துச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மல்லிங்காபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தாடிச்சேரி ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அ தனை எடுத்துச் செல்ல முயன்றனர்.
உடனே அங்கு வந்த குமார் எதற்காக எனது பைக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டினர். மேலும் குமாரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ெசல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரிடம் பணம் பறித்தது வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அஜய் (வயது 19). ஜெகதீ ஸ்வரன் (20), செல்வன் (19), அமர் (25) ஆகியோர் என தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






