என் மலர்
நீங்கள் தேடியது "Male corpse on the rail"
- தண்டவாள பாதையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
- ரெயில்வே போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் கருப்பூர் ரெயில் நிலையத்திற்கும், மேக்னசைட் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாள பாதையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
இதையடுத்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






