என் மலர்
நீங்கள் தேடியது "Malaimalar news echo"
- அத்திக்கடவு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப் படுகிறது.
- அதிகாரிகள் நேற்று ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு வாரம் ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அந்தந்த பகுதியில் பொருத்தியுள்ள பொதுக் குழாய் மற்றும் வீடுகளுக்கு தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் குடிநீரை பிடித்தனர்.
இந்த நிலையில் குடிநீரில் புழுக்கள் நிறைந்தும், துர்நாற்றம் வீசியும் இருந்தது. இதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி செயலாளர் நேரு, மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் குடிநீரில் புழுக்கள் வந்ததாக கூறப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்குள்ள குடிநீர் தொட்டி மற்றும் குழாய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவற்றை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என குடிநீர் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.






