search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahajan"

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல் எஞ்சியிருக்கும் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு கோரி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார். #Parliment
    புதுடெல்லி :

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால் அலுவல்களை முடிப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. எனவே, எஞ்சியிருக்கும் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்து கட்சி சேர்ந்த உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார்.

    உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எழுதிய கடிததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் போன்றது அதன் புனிதம் மற்றும் கவுரவத்தை காப்பாற்றும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஊடகங்களும் அவையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் மக்களிடம் தெளிவாக எடுத்து சொல்கின்றன.

    கடைசியாக நடைபெற்ற கூட்டத்தொடரின்போது உறுப்பினர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி, அவையினுள் பதாகைகளை தாங்கி பிடித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் அடிக்கடி அவையை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது.  

    இந்நிலையில், ஆட்சியின் கடைசி ஆண்டில் 3 பாராளுமன்ற கூட்டத்தொடர் மட்டுமே மீதம் உள்ளன. நேரம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் முடிக்க வேண்டிய அலுவல்கள் மிக அதிகமாக உள்ளது. எனவே இம்மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தொடரின் போது கட்சி வேறுபாடு பார்க்காமல் உறுப்பினர்கள் அமைதியான முறையில் அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #Parliment
    ×